வீட்டு சுவரில் போடப்பட்ட துளையில் சிக்கி விடிய விடிய பரிதவித்த நாய்
கன்னியாகுமரி அருகே வீட்டு சுவரில் போடப்பட்ட துளையில் சிக்கி விடிய, விடிய பரிதவித்த நாயை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.
கன்னியாகுமரி அருகே வீட்டு சுவரில் போடப்பட்ட துளையில் சிக்கி விடிய, விடிய பரிதவித்த நாயை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
உணவு தேடி வந்த நாய்
கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் லெட்சுமிபுரம் காலனியை சேர்ந்தவர் பிரதாப். இவர் தனது வீட்டின் சுற்றுச் சுவரையொட்டி தண்ணீர் மோட்டார் வைத்துள்ளார். இந்த மோட்டாரில் இருந்து வீட்டுக்கு வெளியே தண்ணீர் கொண்டு செல்ல வசதியாக சுற்றுச் சுவரில் தரையில் இருந்து சுமார் 1 அடி உயரத்தில் சிறிய துளை போட்டுள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் சுற்றி திரிந்த ஒரு தெரு நாய் உணவு தேடி அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தது. அந்த நாய் ஒரு கட்டத்தில் எப்படியோ பிரதாப்பின் வீட்டுக்குள் நுழைந்துள்ளது. பின்னர் அந்த சுற்றுச்சுவர் பக்கம் சென்றுள்ளது.
அப்போது வெளியே ெசல்ல வழியை தேடிய போது சுவரில் துளை இருப்பதை கண்டது. உடனே அந்த துளை வழியாக வெளியே சென்று விடலாம் என நினைத்து தலைைய நுழைத்துள்ளது.
துளையில் தலை சிக்கியது
ஆனால் நாயின் தலை சிக்கிக் கொண்டது. அதாவது நாயின் தலை சுவருக்கு வெளியே வந்தபடியும், கழுத்து பகுதி துளையிலும் சிக்கி கொண்டது.
இதனால் முன்னோக்கி செல்ல முடியாமலும், தலையை பின்னோக்கி இழுக்க முடியாமலும் நாய் பரிதவித்தது. தான் ஆபத்தில் சிக்கி கொண்டோம் என நினைத்த நாய் சத்தம் போட முயன்றது. ஆனால் நாயின் கழுத்து பகுதி துளைக்குள் இறுகி கொண்டதால் அதிகமாக சத்தம் போடவும் முடியவில்லை. எனினும் நாய் அதிலிருந்து தப்பிக்க அங்குமிங்கும் அசைந்தபடி போராடியது.
ஒரு கட்டத்தில் தலையை வெளியே எடுக்க பலமாக முயற்சி செய்ததில் கழுத்தில் காயம் ஏற்பட்டு ரத்தமும் வடிந்தது. இதனால் தப்பிக்க முடியாமல் இரவு முழுவதும் சுற்றுச்சுவர் துளையிலேயே பரிதவித்தது.
தீணைப்பு வீரர்கள் மீட்டனர்
நேற்று காலையில் பிரதாப் கண்விழித்து வெளியே வந்த ேபாது வீட்டு சுவரில் நாய் சிக்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் நாயை மீட்க முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. உடனே இதுகுறித்து அவர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் ஆரோக்கியதாஸ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஆறுமுகப் பெருமாள், வீர லெட்சுமணன், விவேகானந்தன், அம்சத்கண்ணன், பார்த்தீபன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சுத்தியல், உளியை பயன்படுத்தி சுமார் 1 மணி நேரம் போராடி சுவரின் துளையை சற்று பெரிதாக உடைத்து நாயை மீட்டனர்.
சுவரில் இருந்து விடுதலையான மகிழ்ச்சியில் நாய் துள்ளி குதித்து சந்தோசத்துடன் ஓடியது. அதுவும் தன்னை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களை பார்த்து நன்றி சொல்வதை போன்று வாலை ஆட்டியபடி சென்றது. இந்த சம்பவம் அந்த பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.
====
(பாக்ஸ்)நாயை மீட்டது எப்படி?
தீயணைப்பு வீரர்கள் விளக்கம்
நாயை மீட்கும் பணி தீயணைப்பு வீரர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. அந்த நாயை மீட்டது எப்படி? என்பது குறித்து அவர்கள் கூறியதாவது:-
சுவரில் தண்ணீர் குழாய் கொண்டு ெசல்ல வசதியாக பிரதாப் வீட்டில் துளை ேபாடப்பட்டுள்ளது. அதில் சுமார் அரை அடி நீளத்துக்கு துளையின் அளவுக்கு பிளாஸ்டிக் குழாய் ெபாருத்தப்பட்டு இருந்தது. அதன் வழியாக செல்ல முயன்ற போது தான் நாய் சிக்கி கொண்டது. தொடர்ந்து நாங்கள் சுத்தியல், உளி மூலம் பிளாஸ்டிக் குழாயை சுற்றிலும் லேசாக உடைத்தோம். பிளாஸ்டிக் குழாய் இருந்ததால் நாயின் மீட்பு பணியின் போது நாயின் கழுத்தில் காயம் எதுவும் ஏற்படவில்லை. அத்துடன் நாய் மிரளாமல் இருக்க அதன் முகத்தை துணியால் கட்டி வைத்திருந்ேதாம்.
நாயை சுவரில் இருந்து மீட்ட பின்பு, பிளாஸ்டிக் குழாய் துண்டு நாயின் கழுத்திலேயே இருந்தது. பின்னர் அந்த பிளாஸ்டிக் குழாையயும் வெட்டி நாயை முழுமையாக விடுவித்தோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.