மின் உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டதால் போர்த்திமந்து அணை தூர்வாரப்பட்டது


மின் உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டதால் போர்த்திமந்து அணை தூர்வாரப்பட்டது
x
தினத்தந்தி 13 May 2023 12:45 AM IST (Updated: 13 May 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

மின் உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டதால் போர்த்திமந்து அணை தூர்வாரப்பட்டது.

நீலகிரி

ஊட்டி

போர்த்திமந்து அணை தூர்வாரப்பட்டு, சகதிஅகற்றப்பட்டுள்ளது.

போர்த்திமந்து அணை

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி தாலுகாவில் போர்த்திமந்து அணை அமைந்து உள்ளது. தமிழக அரசால் கட்டப்பட்ட இந்த அணை பைக்காரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ளது. அருகிலேயே பைக்காரா நீர்வீழ்ச்சி மற்றும் நீர்த்தேக்கம் ஆகியவையும் உள்ளன.

போர்த்திமந்து அணை மற்றும் அணையைச் சுற்றியுள்ள வனப் பகுதிகள், நீர்ப் பறவைகள் போன்ற ஏராளமான வனவிலங்குகளுக்கு இயற்கையான வசிப்பிடமாகச் செயல்படுகிறது.

தூர்வாரி சகதிஅகற்றம்

130 அடி ஆழம் கொண்ட இந்த அணையில் கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து காட்டு குப்பை திட்டம் மூலம் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. எந்திர சுரங்கப்பாதை வழியாக தண்ணீர் எடுக்கும் இடத்தில் சகதி அதிக அளவு சேர்ந்ததால் மின் உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டு வந்தது. இதற்காக போர்த்தி மந்து அணை சகதியை தூர்வாரி அகற்ற திட்டமிடப்பட்டது. கடந்த 2 வாரங்களாக நடந்த பணி தற்போது நிறைவடைந்துள்ளது. பொக்லைன் எந்திரம் லாரிகள் மூலம் சகதி மற்றும் அங்கிருந்த மர துண்டுகள் அகற்றப்பட்டது. இவை அணையின் கரையோர பகுதியில் கொட்டப்பட்டுள்ளது. மொத்தம் 20 அடி வரை மண் அகற்றப்பட்டது.

இதற்காக ரூ.3 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. 23 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அணை தூர்வாரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அப்பர் பவானி அணை தூர்வாரப்பட்டது. இதேபோல் மற்ற அணைகளையும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story