தபால் அலுவலகத்தை தரைத்தளத்தில் அமைக்க வேண்டும்


தபால் அலுவலகத்தை தரைத்தளத்தில் அமைக்க வேண்டும்
x

ஆலங்காயம் தபால் அலுவலகத்தை தரைத்தளத்தில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் உள்ள தபால் அலுவலகம் முதல் மாடியில் செயல்பட்டு வருகிறது. இதனால் வயது முதிர்ந்தவர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிறு சேமிப்பு டெபாசிட் செய்வதற்கும், ஓய்வூதியம் வாங்குவதற்கும் செல்ல சிரமப்படுகின்றனர். பொதுமக்களின் வசதிக்கு ஏற்ப தபால் அலுவலகத்தை வேறொரு கட்டிடத்தில் தரை தளத்தில் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவணடும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story