சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவிலில் பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவிலில் பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x

சிவகாசி விஸ்வநாதசுவாமி கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் வருகிற 7-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

சிவகாசி:

சிவகாசியில் உள்ள சுமார் 500 ஆண்டுகள் பழமையான இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான விஸ்வநாதசுவாமி திருக்கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு சுவாமி வீதி உலா வந்தார்.

நாளை (31-ந்தேதி) முதல் 6-ந்தேதி வரை தினமும் இரவு 8 மணிக்கு வெவ்வேறு வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. 7-ந்தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இதை தொடர்ந்து 8-ந்தேதி காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது. அன்று இரவு 8 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 9-ந்தேதி காலை 10 மணிக்கு உற்சவ சாந்தி நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவுக் கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.


Next Story