மகளுக்கு கல்வி கடன் கேட்டு வங்கி மேலாளரை துப்பாக்கியால் மிரட்டிய சாமியார் கைது


மகளுக்கு கல்வி கடன் கேட்டு வங்கி மேலாளரை துப்பாக்கியால் மிரட்டிய சாமியார் கைது
x

மகளுக்கு கல்வி கடன் கேட்டு வங்கி மேலாளரை துப்பாக்கியால் மிரட்டிய சாமியார் கைது

திருவாரூர்

குடவாசலில், மகளுக்கு கல்வி கடன் கேட்டு வங்கி மேலாளரை துப்பாக்கியால் மிரட்டிய சாமியாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாமியார்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள மூலங்குடியை சேர்ந்தவர் திருமலைசித்தர் சாமியார்(வயது 55). இவர், மூலங்குடியில் சுமார் 2 ஏக்கர் நிலத்தில் ஆசிரமம் கட்டி சீடர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்.

மேலும் மதுரை-திண்டுக்கல் சாலை நிலக்கோட்டை அருகில் உள்ள பள்ளப்பட்டி என்ற இடத்தில் இவருக்கு ஆசிரமம் உள்ளது. இங்கும் இவருக்கு ஏராளமான சீடர்கள் உள்ளனர்.

மகளுக்கு கல்விக்கடன்

கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளப்பட்டியில் இருந்து திருமலைசித்தர் சாமியார் குடவாசல் வந்துள்ளார். பின்னர் மூலங்குடியில் உள்ள வீட்டில் தனது மனைவி அனுஷா, மகள்கள் காவியா, தேயாதிருமலை ஆகியோருடன் இருந்துள்ளார்.

நேற்று காலை குடவாசல் அருகே உள்ள மஞ்சக்குடியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் தனது மகளின் மேல்படிப்பிற்காக கல்வி கடன் கேட்டுள்ளார்.

துப்பாக்கியை காட்டி மிரட்டல்

ஆனால் வங்கி மேலாளர் முத்துசாமி, போதிய ஜாமீன் கொடுத்தால் வங்கி கடன் தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து நேற்று மாலை 4 மணி அளவில் திருமலைசித்தர் சாமியார் ஒரு ஜீப்பில் 10 பேரை அழைத்துக்கொண்டு பலூன் சுடும் துப்பாக்கியையும் எடுத்துக்கொண்டு வங்கிக்கு வந்துள்ளார்.

அங்கு வந்த சாமியார் மகளுக்கு கல்விக்கடன் வழங்குமாறு கேட்டு மேலாளரை மிரட்டியதாக கூறப்படுகிறது.

கைது

இதுகுறித்து தகவல் அறிந்த நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா, குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி ஆகியோர் வங்கிக்கு வந்து சாமியாரை போலீஸ் ஜீப்பில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இதுகுறித்து வங்கி மேலாளர் முத்துசாமி ெகாடுத்த புகாரின் பேரில் குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமியாரை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.

மகளுக்கு கடன் கேட்டு வங்கி மேலாளரை துப்பாக்கியால் சாமியார் மிரட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story