பூக்களின் விலை கிடுகிடு உயர்வு


பூக்களின் விலை கிடுகிடு உயர்வு
x

பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

கரூர்

நொய்யல்,

பூக்கள் விற்பனை

திருமண நிகழ்வுகள் அதிகளவில் நடைபெற்று வருவதாலும், வரத்து குறைந்ததாலும் பூக்கள் விலை‌ உயர்வடைந்ததால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நொய்யல் சுற்று வட்டாரப் பகுதிகளான கவுண்டன் புதூர், பேச்சிப்பாறை, செட்டிதோட்டம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், கொங்கு நகர், நடையனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டு மல்லி, முல்லை, சம்பங்கி, அரளி, செவ்வந்தி, கனகாம்பரம், ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.

இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர். ஏலம் எடுத்த உதிரிப் பூக்களை பல்வேறு ரகமான மாலைகளாகவும், தோரணங்களாலும் கட்டி விற்பனை செய்து வருகின்றனர். சில வியாபாரிகள் உதிரிப்பூக்களைபிளாஸ்டிக் கவரில் போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

கிடுகிடு உயர்வு

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.350-க்கும், சம்பங்கி ரூ.50-க்கும், அரளி ரூ.100-க்கும், ரோஜா ரூ.120-க்கும், முல்லைப் பூ ரூ.350-க்கும், செவ்வந்திப்பூ ரூ.150-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும் விற்பனையானது.

நேற்று நடைபெற்ற ஏல‌த்தில் குண்டு மல்லி கிலோ ரூ.700-க்கும், சம்பங்கி ரூ.90-க்கும், அரளி ரூ.180-க்கும், ரோஜா ரூ.240-க்கும், முல்லைப் பூ ரூ.700-க்கும், செவ்வந்திப்பூ ரூ.400-க்கும், கனகாம்பரம் ரூ.550-க்கும் விற்பனையானது. திருமண நிகழ்வுகள் அதிகமாக உள்ளதாலும், பூக்களின் உற்பத்தி குறைந்துள்ளதாலும் பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story