பூக்கள் விலை கடும் உயர்வு


பூக்கள் விலை கடும் உயர்வு
x

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

விருதுநகர்


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விருதுநகரில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. பொங்கல் பண்டிகை நகர்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பொங்கலிட்டு வழிபடும் நிகழ்ச்சியில் அனைத்து குடும்பங்களிலும் பூக்கள் அத்தியாவசியமாக தேவைப்படும் நிலை உள்ளது. அனைவரும் பூக்கள் அதிக அளவில் வாங்கும் நிலை உள்ளது. பூக்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் விளையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கிழக்கு பகுதியில் மல்லிகை சாகுபடி நடைபெறும் நிலையில் விருதுநகரை சுற்றியுள்ள கிராமங்களில் ரோஜா, செவ்வந்தி, கொண்டை பூ போன்ற பூக்களும் சாகுபடி செய்யப்படுகின்றன. ஆனாலும் தேவை அதிகரித்துள்ள நிலையில் பூக்களின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. மல்லிகை பூ நேற்று காலையில் கிலோ ரூ.4 ஆயிரமாகவும், பிச்சிப்பூ ரூ.3ஆயிரமாகவும், கனகாம்பரம் ரூ. 3ஆயிரமாகவும், ரோஜா ரூ. 500 ஆகவும், செவ்வந்தி ரூ. 400 ஆகவும், அரளி ரூ.300 ஆகவும் விற்பனையானது. பொங்கலை முன்னிட்டு விருதுநகரில் கரும்பு, வெல்லம் உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகமாக இருந்தது. விருதுநகர் மெயின் பஜாரில் பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் அதிக அளவில் வந்து செல்வதை காண முடிந்தது.



Next Story