சத்தி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்தது
பூக்கள் விலை
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்தது.
பூக்கள் ஏலம்
சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு தினசரி காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று பூக்கள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் 4 டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள்.
இதில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.1,225-க்கும், முல்லை ரூ.500-க்கும், காக்கடா ரூ.600-க்கும், செண்டுமல்லி ரூ.85-க்கும், பட்டுப்பூ ரூ.61-க்கும், ஜாதிமல்லி ரூ.650-க்கும், கனகாம்பரம் ரூ.730-க்கும், சம்பங்கி ரூ.180-க்கும், அரளி ரூ.200-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.180-க்கும் ஏலம் போனது.
விலை உயர்வு
நேற்று முன்தினம் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,207-க்கும், முல்லை ரூ.300-க்கும், காக்கடா ரூ.400-க்கும், செண்டுமல்லி ரூ.110-க்கும், பட்டுப்பூ ரூ.67-க்கும், ஜாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.550-க்கும், சம்பங்கி ரூ.100-க்கும், அரளி ரூ.220-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.160-க்கும் விற்பனை ஆனது.
நேற்று முன்தினத்தை விட நேற்று மல்லிகைப்பூ ஒரு கிலோ 18 ரூபாயும், முல்லை 200 ரூபாயும், காக்கடா 200 ரூபாயும், ஜாதிமல்லி 50 ரூபாயும், கனகாம்பரம் 180 ரூபாயும், சம்பங்கி 80 ரூபாயும், துளசி 10 ரூபாயும், செவ்வந்தி 20 ரூபாயும் விலை உயர்ந்திருந்தது. அதேபோல் செண்டுமல்லி 25 ரூபாயும், பட்டுப்பூ 6 ரூபாயும், அரளி 20 ரூபாயும் விலை குறைந்திருந்தது. இதுகுறித்து பூ மார்க்கெட் சங்க நிர்வாகிகள் கூறும்போது, 'நாளை (அதாவது இன்று) ஆடி அமாவாசை என்பதால் வியாபாரிகள் தங்கள் தேவைக்காக பூக்களை அதிக விலைக்கு வாங்கி சென்றார்கள்' என்றனர்.