சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு


சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு
x

வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.

சென்னை,

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் வரலாறு காணாத அளவு உயர்ந்து பவுன் ரூ. 44 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகு ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக தங்கத்தின் விலை கண்ணாமூச்சு காட்டி வருகிறது.

இதனிடையேது தங்கம் விலை நேற்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. நேற்று சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.45,520-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,690-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று விலை சற்று குறைந்துள்ளது. இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து 45,200-க்கு விற்பனை ஆகிறது. கிராமிற்கு ரூ.40 குறைந்து ரூ.5,650-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 70காசுகள் குறைந்து ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Next Story