நேந்திரன் வாழைக்காய் விலை கடும் வீழ்ச்சி


நேந்திரன் வாழைக்காய் விலை கடும் வீழ்ச்சி
x

நேந்திரன் வாழைக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

திருச்சி

நேந்திரன் வாழைக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. எனவே அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாழைகள் சாகுபடி

திருச்சியை அடுத்த அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம பகுதிகளில் நெல், வாழைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக நேந்திரன், ஏழரிசி உள்ளிட்ட ரகங்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன. இங்கு விளையும் வாழைக்காய்கள் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது, நேந்திரன் வாழைக்காய் விலை சரிவை சந்திந்துள்ளது. இதனால் உற்பத்தி விலை கூட கிடைக்காமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே விலைவீழ்ச்சியில் இருந்து காப்பாற்ற வாழைக்காய்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்

ஜீயபுரம் அருகே உள்ள திருச்செந்துறையில் செயல்பட்டு வரும் வாழை வணிக வளாகம் மூலம் நேந்திரன் வாழைக்காய்களை கொள்முதல் செய்து சிப்ஸ் மற்றும் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

இது பற்றி அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயி பாலசுந்தர் கூறுகையில், கடந்த வருடம் நேந்திரன் வாழைக்காய் கிலோ ரூ.45 முதல் 50 வரை விற்பனையானது. ஒரு வாழைத்தார் ரூ. 400-ல் இருந்து ரூ.450 வரை விற்பனை ஆனது. இதனால் விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைத்தது ஆனால் இந்த வருடம் கிலோ ரூ.18-க்கு தான் விற்பனையாகிறது. உரம், மருந்து, சவுக்கு கட்டை, மற்றும் விவசாய கூலி உள்ளிட்டவகைளை கணக்கிட்டால் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவுக்கு கூட வாழைக்காய் விற்பனை ஆகவில்லை. இதனால் நஷ்டத்தைதான் சந்தித்து வருகிறோம். எனவே வாழைக்காய்களை அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றார்.


Related Tags :
Next Story