பழமையான கிணறு உள்வாங்கியது


பழமையான கிணறு உள்வாங்கியது
x

பழமையான கிணறு உள்வாங்கியது

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் கத்தரிப்புலம் ஊராட்சி தெற்கு குத்தகையை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவர் தனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் தனது வீட்டின் பின் பகுதியில் இருந்த 40 அடி ஆழம் உள்ள பழமையான கிணறு திடீரென உள்வாங்கியது. இந்த கிணறு மூலம் வெங்கட்ராமன் தனது விவசாய நிலங்களுக்கு நீர்பாய்ச்சி வந்தது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story