தனியார் மருத்துவமனை ரூ.37 ஆயிரத்தை திருப்பி வழங்க வேண்டும்


தனியார் மருத்துவமனை ரூ.37 ஆயிரத்தை திருப்பி வழங்க வேண்டும்
x

தனியார் மருத்துவமனை ரூ.37 ஆயிரத்தை திருப்பி வழங்க வேண்டும்

திருப்பூர்

ிருப்பூர்

திருப்பூர் நெருப்பெரிச்சலை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 47). இவர் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்காக கடந்த 10-7-2017 முதல் 14-7-2017 வரை திருப்பூர் மனநல மருத்துவமனை மற்றும் குடிபோதை தடுப்பு மையத்தில் உள்நோயாளியாக சிகிச்சை மேற்கொண்டார். அதன்பிறகு 31-12-2017 அன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தில் மது அருந்தியதால் அதன்பிறகு 4-1-2018 முதல் 6-1-2018 வரை உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அப்போது குளுக்கோஸ் ஏற்ற வலது கையில் ஊசி குத்தியதால் புண் ஏற்பட்டது. அதன்பிறகு சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதற்காக ரூ.37 ஆயிரத்து 329 சிகிச்சை கட்டணமாக செலுத்தினார்.

அதற்கு பிறகு, கருணாகரனின் வலது கையில் ஊசி குத்திய இடத்தில் புண் ஏற்பட்டு சீல் பிடித்தது. அதன்பிறகு மற்றொரு மருத்துவமனைக்கு சென்று 30-1-2018 அன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கருணாகரன், உரிய சிகிச்சை அளிக்காததால் கை சீல் பிடித்து அறுவை சிகிச்சை செய்யததற்கு நஷ்டஈடு கேட்டு திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் 9-8-2018 அன்று வழக்கு தொடுத்தார். இரு தரப்பு விசாரணையும் நடைபெற்றது.

இந்தநிலையில் கருணாகரனுக்கு சிகிச்சை கட்டணமான ரூ.37 ஆயிரத்து 329-ஐ 12 சதவீத வட்டியுடனும், வழக்கு செலவுத்தொகையாக ரூ.1,000 ஆகியவற்றை திருப்பூர் மனநல மருத்துவமனை மற்றும் குடிபோதை தடுப்பு மையம் வழங்க வேண்டும் என்று நுகர்வோர் கோர்ட்டு தலைவர் தீபா, உறுப்பினர்கள் பாஸ்கர், ராஜேந்திரன் ஆகியோர் உத்தரவிட்டனர்.


Next Story