தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (வியாழக்கிழமை)நடக்கிறது
கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (வியாழக்கிழமை) கரூர், வெண்ணைமலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. நாளை காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை பதிவு செய்து கொண்டு தொடர்ந்து நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார் நிறுவனம் கலந்து கொண்டு 6,000 பெண் வேலைநாடுனர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் 2021 மற்றும் 2022-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 முதல் 20 வயதுக்குள் இருப்பவர்கள் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம். இம்முகாம் முற்றிலும் இலவசமானது. முகாமில் கலந்து கொள்ள விரும்பும் பெண் வேலைநாடுனர்கள் தங்களுடைய 10, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகலினை கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 04324-223555-க்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.