சிக்கல் சிங்காரவேலவர் கோவில் குடமுழுக்கு பாதுகாப்பு பணிகள்


சிக்கல் சிங்காரவேலவர் கோவில் குடமுழுக்கு  பாதுகாப்பு பணிகள்
x
தினத்தந்தி 2 July 2023 12:15 AM IST (Updated: 2 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிக்கல் சிங்காரவேலவர் கோவில் குடமுழுக்கு பாதுகாப்பு பணிகள் போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம்

நாகை அருகே சிக்கலில் பிரசித்தி பெற்ற சிங்காரவேலவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின்னர் வருகிற 5-ந் தேதி(புதன்கிழமை) குடமுழுக்கு நடக்கிறது. இதை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் ஆகியவற்றுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை முதல்கால யாகசாலை பூஜை நடக்கிறது. தொடர்ந்து 5- ந்தேதி காலை 9.45 மணிக்கு குடமுழுக்கு நடக்கிறது. விழாவில் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அவ்வாறு விழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குடமுழுக்கு விழாவையொட்டி ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, ஊர்க்காவல் படை வீரர்கள் என 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.


Next Story