விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்


விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்
x

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அன்னவாசல் பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஜோஷி தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் சண்முகம் மனு கொடுக்கும் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் மாநில பொதுச்செயலாளர் அமிர்தலிங்கம், மாவட்ட செயலாளர் சலோமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். போராட்டத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்த நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை அன்னவாசல் பேரூராட்சியில் ஏற்படுத்த வேண்டும. கூலி வேலைகள் பார்க்ககூடிய மக்கள் அதிகம் அன்னவாசல் பேரூராட்சி பகுதியில் உள்ளதால் இந்த பேரூராட்சியில் 100 நாள் வேலைதிட்டத்தை இந்த ஆண்டு முதல் அமல்படுத்த வேண்டும். அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் சுழற்சிமுறை இல்லாமல் முழுமையாக 100 நாள் வேலை வழங்க வேண்டும். கூலி ரூ.294-ஐ முழுமையாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை அன்னவாசல் பேரூராட்சி பணியாளர்களிடம் வழங்கினர். இதில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள், பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story