விபத்தை ஏற்படுத்திய டிரைவரை பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு
சேலம்
சேலம் பொன்னம்மாபேட்டை முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபுகுமார் (வயது 27). இவர் நேற்று முன்தினம் இரவு வாய்க்கால்பட்டறை பகுதியில் நடந்து சென்றார். அந்த வழியாக வந்த கார், பிரபுகுமார் மீது மோதியது. இதில் அவரது இடது கால் முறிந்தது. இந்த விபத்தை பார்த்ததும் அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் பிரபுகுமாரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஆத்திமடைந்த பொதுமக்கள் காரை ஓட்டி வந்த டிரைவரை மடக்கி பிடித்து தாக்கினர். கார் கண்ணாடியையும் உடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்தும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பொதுமக்களிடம் இருந்து கார் டிரைவரை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
Next Story