வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x

காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க கோரி சேரம்பாடி வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி

பந்தலூர்,

பந்தலூர் சேரம்பாடி அருகே சப்பந்தோடு, புஞ்சகொல்லி, குழிவயல், கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டம் ேரஞ்ச் எண் 1 மற்றும் 2 உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் புகுந்து பொதுமக்கள் மற்றும் தோட்டதொழிலாளர்களின் குடியிருப்புகளை முற்றுகையிட்டு வருகிறது. மேலும் வீடுகளை உடைத்து சேதப்படுத்துகிறது. விவசாய நிலங்களுக்குள் புகுந்து வாழை, தென்னை, பாக்கு மரங்களை நாசம் செய்கிறது. இந்தநிலையில் நேற்று குடியிருப்புக்குள் காட்டு யானைகள் புகுவதை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் கோரி பொதுமக்கள் சேரம்பாடி வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து உள்ளதால், அவசர தேவைகளுக்கு வெளியே செல்ல முடியாமல் அவதிப்படுகிறோம். விவசாய பயிர்களை சேதப்படுத்துவதால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வேண்டும். வனப்பகுதிகளின் எல்லை ஓரங்களில் அகழி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உதவி வனபாதுகாவலர் ஷர்மிலி தலைமையில் வனவர்ஆனந்த், வனகாப்பாளர்கள் குணசேகர், கிருபானந்தகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனால் சமாதானம் அடைந்த மக்கள் பொதுமக்கள் உதவி வன பாதுகாவலரிடம் மனு அளித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story