பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x

பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கன்னியாகுமரி

ராஜாக்கமங்கலம்:

கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வெள்ளமோடி பகுதியில் 50 ஆண்டுகளாக சிறிய கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு வருகிறவர்கள் தங்குவதற்கோ, உடைகள் மாற்றவோ அறைகள் இல்லாமல் இருந்தது. இதையடுத்து அந்த ஆலயத்தின் அருகில் அறைகள் கட்டுவதற்காக கணபதிபுரம் பேரூராட்சியில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு செயல் அலுவலர் அனுமதி வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் ஆலயத்தின் அருகில் கட்டிடம் கட்டுவதற்காக அனுமதி வழங்க பணியில் ஈடுபட்டுள்ள செயல் அலுவலரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்று வட்டராத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாலை கணபதிபுரம் பேரூராட்சி செயல் அலுவலரின் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த ராஜாக்கமங்கலம் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து அங்கு கூடி நின்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேச்சுவார்த்தைக்கு இணை இயக்குனர் வரவேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைதொடர்ந்து எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், பஞ்சாயத்தில் ஒரு அவசர தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சம்மந்தப்பட்ட சர்வே எண்ணில் எந்த புதிய கட்டுமானத்துக்கும் அனுமதியில்லை என அறிவித்ததை தொடர்ந்து கூட்டம் கலைந்து சென்றது. இந்த சம்பவத்தால் நேற்று கணபதிபுரம் பேரூராட்சி பகுதியில் 4 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story