தூத்துக்குடி மாநகராட்சி செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்
தூத்துக்குடி மாநகராட்சி செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என ஆணையாளர் சாருஸ்ரீ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம், திடக்கழிவு மேலாண்மை பணிகள், தனிநபர் கழிப்பறை, சமுதாய மற்றும் பொது கழிப்பறைகளை நல்ல முறையில் பராமரித்தல் தொடர்பான தரக்குறியீடுகள் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதனை 100 சதவீதம் தன்னிறைவு அடையும் வகையிலும், திறந்த வெளி மலம் கழித்தல் இல்லாத பட்டியலில் அடுத்தக்கட்ட சிறப்பு அந்தஸ்து பெறும் வகையிலும் மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
எனவே பொதுமக்கள் மாநகராட்சியின் செயல்பாடுகள் மற்றும் அதனை மேம்படுத்துவதற்கான கருத்துக்கள், ஆட்சேபனைகள் இருந்தால் மாநகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story