போதை பொருட்கள் விற்பனை குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம்


போதை பொருட்கள் விற்பனை குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம்
x
தினத்தந்தி 1 Oct 2022 12:15 AM IST (Updated: 1 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் போலீசாருக்கு தேவைப்படுகிறது. ஆகவே பொதுமக்கள் சமுதாயத்தின் மீது அக்கறை உணர்வுடன் தங்கள் பகுதிகளிலோ, பள்ளி மற்றும் கல்லூரி அருகிலோ, கடைகள் போன்ற பொது இடங்களிலோ கஞ்சா, புகையிலை போன்ற போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் குறித்த தகவல் தெரிந்தால் தகவல் தெரிவிக்கலாம். பொதுமக்கள் 83000 14567 மற்றும் 95141 44100 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு தகவலாகவோ அல்லது வாட்ஸ் தகவலாகவோ 24 மணிநேரமும் தெரிவிக்கலாம். தகவல் தருபவர்கள் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்து உள்ளார்.


Next Story