திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புரோக்கர்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புரோக்கர்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதாக  பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
x

திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புரோக்கர்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருப்பூர்

அனுப்பர்பாளையம், செப்.15-

திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புரோக்கர்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வட்டார போக்குவரத்து அலுவலகம்

திருப்பூர் சிறுபூலுவப்பட்டியில் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகமும், பல்லடம் ரோடு வீரபாண்டி பிரிவில் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இதில் வடக்கு பகுதியில் அதிக அளவில் பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும், பனியன் நிறுவனங்களும் அதிகமாக இருப்பதால் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு ஓட்டுனர் உரிமம், உரிமம் புதுப்பித்தல், புதிய வாகனங்களுக்கு பதிவு எண் பெறுதல் உள்பட பல்வேறு பணிகளுக்காக தினமும் ஏராளமான வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வந்து செல்கின்றனர்.

வட்டார போக்குவரத்து அலுவலகம் தொடர்பான பெரும்பாலான பணிகளை ஆன்லைன் மூலமாக மேற்கொள்ள பொதுமக்களுக்கு அரசு வசதிகள் செய்து கொடுத்துள்ளது. ஆனால் சரியான வழிகாட்டுதல் இல்லாத காரணத்தால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் புரோக்கர்கள் மற்றும் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளை நாடுகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புரோக்கர்களின் தலையீடும், நடமாட்டமும் அதிகரித்து வருகிறது. மேலும் புரோக்கர்கள் பொதுமக்களிடம் அதிக கட்டணத்தை வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

வாக்குவாதம்

நேற்றுமுன்தினம் வடக்கு வட்டார அலுவலகத்திற்கு வந்த சில பெண்கள் அவர்களுடைய பணிகள் நடைபெற தாமதமானதால் புரோக்கர்கள் சிலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் இதை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ள வில்லை. இளம்பெண் ஒருவர் தன்னுடைய வேலை மிகவும் தாமதமானதால் கோவைக்கு தேர்வு எழுத வேண்டும் என்று கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். மேலும் சில பெண்கள் கேட்ட அளவிற்கு பணத்தை கொடுத்தும், காலை 11 மணிக்கு வந்து, நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது என்று புலம்பியபடி அமர்ந்திருந்தனர். எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புரோக்கர்களின் நடமாட்டத்தை அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

----

Related Tags :
Next Story