ெரயில்வே பாலத்தில் தண்ணீர் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் அவதி


ெரயில்வே பாலத்தில் தண்ணீர் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் அவதி
x

குடியாத்தம் அடுத்த மேல் ஆலத்தூர் ரெயில்வே பாலத்தில் தண்ணீர் தேங்கியிருப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

வேலூர்

குடியாத்தம் அடுத்த மேல் ஆலத்தூர் ரெயில்வே பாலத்தில் தண்ணீர் தேங்கியிருப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

ரெயில்வே பாலம்

குடியாத்தத்தை அடுத்த மேல் ஆலத்தூர் பகுதியில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ெரயில்வே பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் கீழ்பகுதி வழியாக மேல் ஆலத்தூர், கூடநகரம், அணங்காநல்லூர், பட்டு, கொத்தகுப்பம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

இந்தப்பாலத்தின் கீழ் பகுதி, சுரங்கப்பாதை போல் இருப்பதால் மழைக்காலங்களில் ெரயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் தண்ணீர் தேங்குகிறது. இந்த தண்ணீரை வெளியேற்ற நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு இரண்டு மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றி அருகில் உள்ள கிணற்றில் விடப்பட்டு வருகிறது.

தண்ணீர் தேங்கியது

மழை காலங்களில் மழை பெய்யாவிட்டாலும் இந்த பாலத்தின் இரு பக்கத்திலும் உள்ள சுவர்களில் இருந்து ஊற்றுக்கள் குழாய் தண்ணீர் போல் பீய்ச்சி அடித்த படி வந்து கொண்டே இருக்கிறது. இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்னர் ெரயில்வே பாலத்திற்கு கீழே சுமார் 3 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது.

அதனால் இந்தப் பாலத்தின் வழியாக செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளானார்கள். வாகனங்களில் தண்ணீர் புகுந்துவிடுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு பாலத்தை கடந்து சென்றனர். மோட்டார் இயக்க டீசல் சப்ளை இல்லாததால் தண்ணீரை வெளியேற்ற வில்லை. இதனால் துர்நாற்றம் வீசும் தண்ணீரில் பொதுமக்கள் சிரமத்துடன் கடந்து சென்றனர்.

இதனை தொடர்ந்து நேற்று மதியம் நீரை வெளியேற்றும் மோட்டார்களுக்கு மின் இணைப்பு பெறப்பட்டது. நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள், தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே தண்ணீரை வெளியேற்றி, நிரந்தர தீர்வுக்காண வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story