அரிக்கொம்பன் யானையால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை


அரிக்கொம்பன் யானையால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை
x

அரிக்கொம்பன் யானையின் நடமாட்டம் தீவிரமாக கண்காணிக்கப்படுவதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என கலெக்டர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

அரிக்கொம்பன் யானையின் நடமாட்டம் தீவிரமாக கண்காணிக்கப்படுவதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என கலெக்டர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.

அரிக்கொம்பன் யானை

குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிடிக்கப்பட்ட அரிக்கொம்பன் யானையானது களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட குற்றியாறு அணை பகுதியிலுள்ள அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. யானையின் நடமாட்டத்தினை களக்காடு முண்டந்துறை வனப்பணியாளர்கள் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர். யானையின் கழுத்தில் மாட்டப்பட்டுள்ள ரேடியோ காலர் மூலம் யானையின் இருப்பிடம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அச்சப்பட தேவையில்லை

அரிக்கொம்பன் யானையானது தற்போது நல்ல உடல் நலத்துடன் உள்ளது. சீராக உணவு மற்றும் நீர் எடுத்துக்கொள்கிறது. தொடர்ந்து இந்த யானையானது வன அதிகாரிகள் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் ஆகியோர் அடங்கிய சிறப்புக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவை இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story