போலீசாரின் பணி சுமையை சீர்படுத்த அமைக்கப்பட்ட ஆணையத்தின் தற்போதைய நிலையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்


போலீசாரின் பணி சுமையை சீர்படுத்த அமைக்கப்பட்ட ஆணையத்தின் தற்போதைய நிலையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்
x

போலீசாரின் பணி சுமையை குறைக்கவும், அவர்களின் மன ஆரோக்கியத்தை சீர்படுத்தவும் அமைக்கப்பட்ட ஆணையத்தின் தற்போதைய நிலையை மக்களுக்கு அரசு தெரிவிக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஓய்வுபெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் காவல் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்காக ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணையம் அமைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை எந்தவொரு அறிக்கையும் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டதாக தெரியவில்லை.

உடல் சோர்வுடனும், மன சோர்வுடனும் காவல்துறையில் பணியாற்றி வரும் சகோதர, சகோதரிகளை உதாசீனப்படுத்தாமல் அவர்களின் உண்மையான பிரச்சினைகளை புரிந்து கொண்டு இந்த அரசு செயல்பட வேண்டும். தமிழகத்தில் காவல்துறையில் உள்ள சுமார் 12 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

தற்போதைய நிலை

போலீசாரின் பணி சுமையை குறைக்கவும், அவர்களின் மன ஆரோக்கியத்தை சீர்படுத்தவும் அமைக்கப்பட்ட ஆணையத்தின் தற்போதைய நிலையை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். இந்த ஆணையத்தின் அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அரசியல் குறுக்கீடுகள் இன்றி போலீசார் சுதந்திரமாக பணியாற்றும் சூழலை உருவாக்குவது காலத்தின் கட்டாயமும், அரசின் கடமையும் ஆகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story