ரேஷன் கடைக்கு பூட்டு போட முயன்ற பொதுமக்களால் பரபரப்பு


ரேஷன் கடைக்கு பூட்டு போட முயன்ற பொதுமக்களால் பரபரப்பு
x

ரேஷன் கடைக்கு பூட்டு போட முயன்ற பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை

வடகாடு அருகே அனவயல் தடியமனை பகுதியில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் மண்எண்ணெய் குறைத்து வழங்குவதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் ரேஷன் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்த திரண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வடகாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அனுமதி இல்லாமல் இது போன்ற போராட்டங்களில் ஈடுபட கூடாது என எனக்கூறி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதனை தொடர்ந்து பூட்டு போடும் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story