மலைப்பாம்பு பிடிபட்டது


மலைப்பாம்பு பிடிபட்டது
x

செண்பகராமன்புதூர் பகுதியில் மலைப்பாம்பு பிடிபட்டது

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி,

செண்பகராமன்புதூர்-தோவாளை செல்லும் பாதையில் கால்வாய் கரை அருகே வில்லுச்சேரி குளம் உள்ளது. இந்த பகுதியில் காலையில் மலைப்பாம்பு ஒன்று கிடந்தது.

இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். பின்னர் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பூதப்பாண்டி வனச்சரகர் ரவிந்திரன் உத்தரவின் பேரில் வனக்காப்பாளர் சிவராமன், வன காவலர் துரைராஜ், வேட்டை தடுப்பு காவலர் பிரவீன் ஆகியோர் விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்தனர். இந்த மலைப்பாம்பு 10 அடி நீளம் இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் பிடிபட்ட மலைப்பாம்பு அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.


Next Story