மலைப்பாம்பு சிக்கியது


மலைப்பாம்பு சிக்கியது
x

நெல்லை தாமிரபரணி ஆற்றில் மீன்பிடிக்க விரித்த வலையில் மலைப்பாம்பு சிக்கியது.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு குருந்துடையார்புரம் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் மீன்பிடிக்க விரிக்கப்பட்ட வலையில் நேற்று 6 அடி நீளம் உடைய மலைப்பாம்பு சிக்கியது.

இதைக்கண்ட பொதுமக்கள் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு படையினர் அங்கு சென்று வலையில் சிக்கியிருந்த மலைப்பாம்பை மீட்டனர். பின்னர் அதை வனத்துறையினரிடம் ஒப்படைத்து, வனப்பகுதியில் விடப்பட்டது.


Next Story