வாலிபரை கடித்து குதறிய வெறிநாய்கள்


வாலிபரை கடித்து குதறிய வெறிநாய்கள்
x
தினத்தந்தி 6 Dec 2022 12:15 AM IST (Updated: 6 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருமங்களக்குறிச்சியில் வெறிநாய்கள் வாலிபரை கடித்து குதறியதில் பலத்த காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு அருகே உள்ள திருமங்களக்குறிச்சி கீழேத் தெருவில் வசித்து வருபவர் மாரியப்பன். விவசாயி. இவரது மகன் சந்தனமாரியப்பன். வீட்டில் இருந்து தோட்டத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். கிராமத்திற்கு அருகே காடுகளில் சுற்றி திரிந்த 15 வெறிநாய்கள் அவரை சூழ்ந்து கொண்டு கடித்து குதறின. கிராம மக்கள் திரண்டு சென்று அவரை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இப்பகுதியில் ஏராளமான வெறிநாய்கள் சுற்றிதிரிவதாகவும், ஆடு, மாடுகளை கடித்து கொன்று வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது வாலிபர் ஒருவரையும் வெறிநாய்கள் கடித்து குதறியிருப்பது இக்கிராம மக்களை பீதியடைய செய்துள்ளது. உடனடியாக இப்பகுதியில் சுற்றித்திரியும் வெறிநாய்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story