பட்டா கத்தியுடன் ரவுடி கைது


பட்டா கத்தியுடன் ரவுடி கைது
x

பட்டா கத்தியுடன் ரவுடி கைது

தஞ்சாவூர்

தஞ்சை சீனிவாசபுரம் பகுதியில் பட்டா கத்தியுடன் ரவுடி ஒருவர் நிற்பதாக போலீஸ் சூப்பிரண்டின் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார், ஏட்டுகள் உமாசங்கர், ராஜேஷ் மற்றும் போலீஸ்காரர்கள் அருள்மொழிவர்மன், நவீன் சுஜித், அழகு ஆகியோர் அடங்கிய தனிப்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர்கள் விரைந்து சென்று அந்த ரவுடியை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் தஞ்சையை சேர்ந்த கார்த்திக் என்கின்ற பல்லு கார்த்திக் என்பது தெரியவந்தது. மேலும் இவர் மீது தஞ்சை, திருவாரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் பதிவாகி இருப்பதும், போலிசாரின் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்று இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கார்த்திக்கை தஞ்சை மேற்கு போலீசாரிடம் தனிப்பிரிவு போலீசார் ஒப்படைத்தனர். அதன் பேரில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆயுதங்களுடன் வந்ததாக கார்த்திக்கை கைது செய்தனர்.


Related Tags :
Next Story