ரவுடி வெட்டிக் கொல்லப்பட்டவழக்கில் மேலும் 3 பேர் கைது


தினத்தந்தி 31 Jan 2023 12:15 AM IST (Updated: 31 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ரவுடி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் ரவுடி வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரவுடி வெட்டிக்கொலை

தூத்துக்குடி சங்கரப்பேரியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மகன் கருப்பு என்ற கருப்பசாமி (வயது 27). இவர் கடந்த 28-ந் தேதி கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து, கருப்பசாமி, உத்தண்டு ரமேஷ், அங்குசாமி மகன் உத்தண்டு, தெற்கு சங்கரப்பேரியை சேர்ந்த வீரபாண்டியன் என்ற ரவீந்திரன் (40), முத்துராஜ் என்ற ராசு (35), கோமதிபாய் காலனியை சேர்ந்த வேல்சாமி (24) ஆகிய 6 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர்.

மேலும் 3 பேர் சிக்கினர்

தொடர்ந்து கொலை வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மேலும் 3 பேர் சிக்கினர்.

அதாவது இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சங்கரப்பேரியை சேர்ந்த சக்திவேல் (52), கருத்தப்பாண்டி (21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இதே போன்று அந்த பகுதியில் வாகனங்கள் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகவும் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story