கொள்ளையடித்த பணத்தில் சொகுசு வாழ்க்கை நடத்திய ரவுடிகள்


கொள்ளையடித்த பணத்தில் சொகுசு வாழ்க்கை நடத்திய ரவுடிகள்
x

போலீஸ் துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த ரவுடிகள் கொள்ளையடித்த பணத்தில் சொகுசு வாழ்க்கை நடத்தியதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

திருச்சி

போலீஸ் துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த ரவுடிகள் கொள்ளையடித்த பணத்தில் சொகுசு வாழ்க்கை நடத்தியதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

பரபரப்பு தகவல்கள்

திருச்சியில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த ரவுடிகளான துரைசாமி, சோமசுந்தரம் ஆகியோர் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. துரைசாமி திண்டுக்கல்லை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவரின் முக்கிய கூட்டாளியாக இருந்து செயல்பட்டுள்ளார். மேலும் அந்த திண்டுக்கல் ரவுடி உத்தரவிடும் பணிகளை நேர்த்தியாக செய்து முடிப்பதில் துரைசாமி, சோமசுந்தரம் திறமையானவர்களாக இருந்துள்ளனர். புதுச்சேரி முன்னாள் அமைச்சர் வி.எம்.சி. சிவக்குமார் கொலை வழக்கு தொடர்பாக திருச்சி பொன்மலையைச் சேர்ந்த பிரபல ரவுடி இளவரசன் கைது செய்யப்பட்டார். பின்னர் கடந்தாண்டு டிசம்பர் 12-ந்தேதி புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக கையெழுத்திட்டு திரும்பிய இளவரசனை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிக் சாய்த்தது.

கொள்ளையில்...

இந்த கொலை வழக்கில் தற்போது துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த துரைசாமிக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் வட மாநில கொள்ளையர்கள் தமிழகத்தில் தங்கி இருந்து நோட்டமிட்டு கோடிக்கணக்கான நகை, பணத்தை கொள்ளையடித்து செல்வது போன்று துரைசாமி, சோமசுந்தரம் ஆகியோரும் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இவர்களுக்கு வடமாநில கொள்ளையர்களுடனும் தொடர்பு இருப்பதாக தெரிகிறது. மேலும் இவர்கள் கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து சொகுசு வாழ்கை நடத்தி வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

தற்போது இவர்கள் திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்த பின்னர் முறையாக கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன் பின்னர் காவலில் எடுத்து விசாரிக்கும் போது துரைசாமி, சோமசுந்தரம் ஆகியோர் பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Related Tags :
Next Story