விவசாயிகளை ஏமாற்றிய மழை
வெம்பக்கோட்டை பகுதிகளில் விவசாயிகளை மழை ஏமாற்றி சென்றது.
விருதுநகர்
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழையை நம்பி நித்திய கல்யாணி, உளுந்து, பருத்தி, சீனி அவரைக்காய், சூரியகாந்தி, பயறு வகைகள் ஆகியவற்றை பயிரிட்டுள்ளனர். கடந்த வாரம் சாரல் மழை பெய்ததால் கோடை உழவு பணியை தொடங்கியுள்ளனர். கடந்த 2 தினங்களாக மதியம் 3 மணி அளவில் இருந்து குளிா்ந்த காற்று வீசுகிறது. பலத்த இடி, மின்னல் அடிக்கிறது. ஆனால் மழை பெய்யவில்லை. இதனால் மழை வரும் என ஏக்கத்துடன் வானத்தை பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் பெய்த மழைக்கு பிறகு சரியான முறையில் மழை பெய்யாததால் விவசாயிகள் விவசாய பணிகளை முழுவீச்சில் செய்யாமல் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story