வாட்சுக்கான ரசீதை அண்ணாமலை மாலைக்குள் வெளியிட வேண்டும் - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் விரைந்து இணைக்கவும் எனமின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
சென்னை,
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் விலையுயர்ந்த ரபேல் கைக்கடிகாரம் குறித்து, சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அதற்கு அவர் பதிலளித்தார்.
இதனிடையே, வெறும் 4 ஆட்டுக்குட்டிகள் மட்டுமே தனது சொத்து எனக் கூறும் அண்ணாமலை, சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரபேல் கைக்கடிகாரத்தை, வாங்கியது எப்படி என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பினார்.
இந்தநிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
மின் கட்டண உயர்வால் மின்சாரத்துறைக்கு ரூ 1000 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மின் இணைப்பு எண்ணுடன் 1.20 கோடி பேர் ஆதாரை இணைத்துள்ளனர். இந்த மாத இறுதிக்குள் அனைவரும் ஆதாரை இணைக்க வேண்டும்.
நான் கேட்ட கேள்வி வாங்கிய கடிகாரத்திற்கு பில் உள்ளதா என்று தான், மடியில் கனம் இல்லை என்றால் வழியில் பயம் இருக்காது. முடிஞ்சா அந்த 'நபர்' அந்த கடிகாரத்திற்கான ரசீதை இன்னைக்கு மாலைக்குள்ள வெளியிடனும் என்றார்.