பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த கோரி சார்பதிவாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த கோரி சார்பதிவாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Feb 2023 5:50 PM IST (Updated: 15 Feb 2023 5:57 PM IST)
t-max-icont-min-icon

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த கோரி சார்பதிவாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தக்கோரி திருவண்ணாமலையில் சார்பதிவாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை துர்க்கையம்மன் கோவில் அருகிலுள்ள இணை சார்பதிவாளர் எண் 1 அலுவலகம் முன்பு தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நிர்வாகி தென்றல் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் திரிபுரசுந்தரி, தமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போளூர் சிவசங்கரன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்,''ரியல் எஸ்டேட் சட்டத்தின் படி புரமோட்டார் அல்லாத ஏழை மக்களின் மனைகளாக பதிவதில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும். அதிகரித்து வரும் மக்கள் தேவைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். தமிழக அரசின் இருமொழி கொள்கைக்கு எதிரான 3-வது மொழி தேர்வை ரத்து செய்ய வேண்டும். அரசாணை 80-ன் படி பணியிடை நிக்கத்திலுள்ள அனைத்து பணியாளர்களையும் உடனடியாக பணியில் அமர்த்திட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.=======


Next Story