தேர்தல் பணியாற்றியவர்களுக்கு பொறுப்பு வழங்கப்படும்
தேர்தல் பணியாற்றியவர்களுக்கு பொறுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
தேர்தல் பணியாற்றியவர்களுக்கு பொறுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
செயல் வீரர்கள் கூட்டம்
ஜோலார்பேட்டையை அடுத்த பால்நாங்குப்பம் கூட்ரோடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் ஆர்.எஸ்.ஆனந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் க.தேவராஜி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் நல்லதம்பி, வில்வநாதன், மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகுமார், திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் டி.கே. மோகன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி, ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது:-
பொறுப்பு வழங்க நடவடிக்கை
ேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழா சிறப்பு பொதுக்கூட்டத்தை ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் இந்த மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றிய கட்சி நிர்வாகிகள் பாதிபேர் உள்ளாட்சி நிர்வாகத்திற்கு வந்துள்ளனர். மீதமுள்ளவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலில் அறநிலையத்துறையில் மாவட்டம் தோறும் மாவட்ட குழு அமைத்து அதில் கட்சிப் பணியாற்றிய மற்றவர்களுக்கும் பொறுப்பு வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று மாவட்டத்தில் அறநிலையத்துறை மாவட்ட குழு அமைத்து நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து பகுதிகளிலும் பூத் கமிட்டி கூட்டம் நடத்த வேண்டும். கட்சி சார்ந்து 22 அணிகளின் நிர்வாகிகளை நியமிக்கும் போது தகுதியான நபர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். அனைவரும் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிப் பணிகளை மேற்கொண்டு வெற்றி பெற பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தே. பிரபாகரன், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.கே.சதீஷ்குமார், க.உமா கன்ரங்கம், நகர செயலாளர் ம.அன்பழகன், எஸ்.சாரதி குமார், ஜோலார்பேட்டை ஒன்றியக் குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார், நகர மன்ற தலைவர் காவியா விக்டர், துணைத் தலைவர் இந்திரா பெரியார்தாசன், முன்னாள் நகரமன்ற துணைத்தலைவர் சி.எஸ்.பெரியார்தாசன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், பிற அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.