வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம்


வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம்
x

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்யும் போராட்டம் நடத்தினர்.

கரூர்

போராட்டம்

பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தீர்மானத்தில் தெரிவித்துள்ள துணை ஆட்சியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பணியிடங்களுக்கும் சுழற்சி முறையில் பணிமாறுதல் செய்திட வேண்டும். அரசியல் தலையீட்டினை தடுத்து நிறுத்த வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தின்படி வருவாய்த்துறை அலுவலர்களை சுதந்திரமாகவும், சுயமரியாதையாகவும் பணி செய்வதற்கு உத்திரவாதப்படுத்திட வேண்டும். எந்தவொரு மனுக்கள் இருந்தாலும் அரசு வழிகாட்டியின்படி உரிய கால அவகாசம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்யும் போராட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

இந்த போராட்டத்தில் கரூர் கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் பணிபுரியும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் சுமார் 230 பேர் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 6-ந்தேதி அனைத்து வட்ட கிளைகள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது மற்றும் 14-ந்தேதி கலெக்டர் அலுவலகத்தில் மதியம் 2 மணி முதல் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது எனவும் கரூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.


Next Story