குழாய் உடைப்பால் சேதமான தார்சாலை


குழாய் உடைப்பால் சேதமான தார்சாலை
x

குழாய் உடைப்பால் சேதமான தார்சாலை

திருப்பூர்

போடிப்பட்டி

மடத்துக்குளத்தையடுத்த துங்காவி பகுதியிலிருந்து மெட்ராத்தி, பணத்தம்பட்டி, குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முக்கிய ரோடு உள்ளது. இந்த ரோட்டில் தினசரி அதிக அளவில் வாகன போக்குவரத்து உள்ளது. இந்தநிலையில் இங்குள்ள கூட்டுறவு வங்கிக்கு அருகில் பூளவாடி ரோடு பிரியும் பகுதியில் அடிக்கடி குடிநீர்க் குழாய் உடைப்பு ஏற்படுகிறது. இதனால் தார் ரோடு சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த ரோட்டில் செல்லும் வாகனங்கள் தடுமாறி விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.குறிப்பாக இரவு நேரங்களில் இந்த ரோட்டில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படுகிறது.மேலும் இந்த பள்ளத்தில் சேறும் சகதியுமாக எப்போதும் நீர் தேங்கியுள்ளது. இதனால் இந்த வழியாக நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது வேகமாக செல்லும் வாகனங்கள் சேற்றை வாரி இறைக்கும் நிலை ஏற்படுகிறது.மேலும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களைக் கொண்டு செல்லும் போதும் கால்நடைகளை ஓட்டிச் செல்லும் போதும் ரோட்டிலுள்ள பள்ளத்தால் சிரமங்களை அனுபவிக்கின்றனர்.எனவே குடிநீர்க்குழாய் உடைப்பால் குடிநீர் தொடர்ந்து வீணாவதைத் தடுக்கவும், ரோட்டைப் பழுது நீக்கி விபத்துக்களைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story