வள்ளலார் பகுதியில் சாலை தரமாக அமைக்கவில்லை


வள்ளலார் பகுதியில் சாலை தரமாக அமைக்கவில்லை
x

வள்ளலார் பகுதியில் சாலை தரமாக அமைக்கவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், ஒப்பந்ததாரரிடம் வாக்குவாதம் செய்தனர்.

வேலூர்

வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலம் 20-வது வார்டுக்கு உட்பட்ட வள்ளலார் டபுள்ரோடு மற்றும் வருங்கால வைப்புநிதி அலுவலக பகுதிகளில் கால்வாய் மற்றும் சாலை பணிகள் நடந்து வருகிறது.

வள்ளலார் டபுள்ரோட்டில் சிமெண்டு சாலை தரமாக அமைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் நேற்று வருங்கால வைப்புநிதி அலுவலகம் பின்புறம் பூங்கா அருகே கால்வாய் அமைக்கும் பணியை திடீரென தடுத்து நிறுத்தினர். அந்த பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரரிடம், வள்ளலார் பகுதியில் டபுள்ரோடு உள்ளிட்ட பல இடங்களில் சாலைகள் தரமாக அமைக்கப்படவில்லை. அந்த சாலைகளை தரமாக அமைத்துவிட்டு அடுத்தகட்டமாக மற்ற வேலைகளை செய்ய வேண்டும். கால்வாய் அமைக்கும் போது மின்கம்பத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு ஒப்பந்ததாரர், சாலைகளில் ஏதேனும் குறைபாடு இருந்தால் சரி செய்வதாக கூறினார். இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அங்கிருந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story