சேதமடைந்து கற்குவியலாக காணப்படும் சாலை


சேதமடைந்து கற்குவியலாக காணப்படும் சாலை
x
தினத்தந்தி 5 Sept 2023 12:15 AM IST (Updated: 5 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்து கற்குவியலாக காணப்படும் சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்து கற்குவியலாக காணப்படும் சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.

சேதமடைந்த சாலை

கூத்தாநல்லூர் அருகே உள்ள விழல்கோட்டகத்தில் இருந்து, தேவங்குடி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை திருவாரூர், மன்னார்குடி, நீடாமங்கலம் போன்ற பகுதிகளை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது. இந்த சாலையை தேவங்குடி, விழல்கோட்டகம், கள்ளவாழச்சேரி, சித்தாம்பூர், அரிச்சபுரம், கற்கோவில், வெள்ளக்குடி, லெட்சுமாங்குடி, அதங்குடி, பொதக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள 30- க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் பள்ளி வாகனங்கள், கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் போன்ற சிறிய ரக வாகனங்கள் சென்று வருகின்றன.

விரைவில் சீரமைக்க கோரிக்்கை

இந்தநிலையில் அன்றாடம் மக்கள் பயன்படுத்தி வரும் இந்த சாலை கடந்த 7 ஆண்டுகளாக சேதமடைந்து மிகமோசமான நிலையில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கற்கள் சிதறியும், கற்குவியலாகவும் காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் சென்று வருவோர் கீழே விழுந்து காயம் அடைகிறார்கள்.

இந்த வழியாக செல்லும் வாகனங்களின் டயர்களும் அடிக்கடி பஞ்சராகிறது. இதனால் அருகில் உள்ள பள்ளிகளுக்கு சென்று வரும் மாணவர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். இந்த சாலையை கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளன. எனவே இந்த சாலையில் கற்குவியல்களை அகற்றி முழுமையாக தார்சாலையாக சீரமைத்து தர வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story