தார்சாலையை சீரமைக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை


தார்சாலையை சீரமைக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை
x

ஆலப்பாக்கம் ஊராட்சியில் தார்சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியம் ஆலப்பாக்கம் ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்கு ஊராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், ரேஷன் கடை, நூலகம், கால்நடை மருத்துவமனை உள்ளிட்டவைகள் அமைந்துள்ளன.

ஆலப்பாக்கம் பகுதியில் இருந்து துரைபெரும்பாக்கம் ஊராட்சி வழியாக காவேரிப்பாக்கம் செல்லும் தார்சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது அந்தத் தார்சாலை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஜல்லிக்கற்கள் பெயர்ந்து பெரிய பெரிய பள்ளமாக காணப்படுகிறது.

அந்தப் பள்ளத்தில் மழைநீா் தேங்கி குட்டை போல் காட்சியளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தார் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story