தொடர் மழையால் சேறும், சகதியமாக மாறிய சாலை


தொடர் மழையால் சேறும், சகதியமாக மாறிய சாலை
x
தினத்தந்தி 5 May 2023 6:00 AM IST (Updated: 5 May 2023 6:00 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அருகே தொடர் மழையால் சேறும், சகதியமாக சாலை மாறியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

நீலகிரி

ஊட்டி

நீலகிரி உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை உள்பட பல்வேறு இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் ஊட்டியை அடுத்த கல்லட்டி பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.

இதேபோல் ஊட்டி அடுத்த கோலணி மட்டம் முட்டிநாடு சாலை சேறும் சகதியுமாக மாறிவிட்டது. வாகனங்கள் செல்ல முடியாத அந்த சாலையில் நடந்து செல்லவே பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளும் அவதிப்படுகின்றனர்.

இன்னும் மழை அதிகரித்தால் அந்த சாலையில் நடந்து செல்லவே முடியாது என்பதால் சாலையை சரி செய்ய வேண்டும் என்று அந்த பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story