41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க சாலை பணியாளர்கள் வேண்டுகோள்


41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க சாலை பணியாளர்கள் வேண்டுகோள்
x

41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க சாலை பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

பெரம்பலூர்

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் கோரிக்கைளை நிறைவேற்றக்கோரி பெரம்பலூரில் கவன ஈர்ப்பு கோட்ட பொதுக்குழு கூட்டத்தை நேற்று நடத்தினர். இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநில செயலாளர் பழனிசாமி தொடக்க உரையாற்றி, கோரிக்கைகளை விளக்கி பேசினார். கூட்டத்தில், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். தொழில்நுட்ப கல்வி திறன் பெறாத ஊழியர்களுக்குரிய ஊதிய மாற்றம் ரூ.5 ஆயிரத்து 200, ரூ.20 ஆயிரத்து 200 தர ஊதியம் ரூ.ஆயிரத்து 900 வழங்க வேண்டும். பணி நீக்க காலம் மற்றும் பணிக்காலத்தில் உயிர் நீத்தவரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் விரைந்து வழங்க வேண்டும். நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை தனியார் பராமரிக்கும் ஒப்பந்த நடைமுறையை கைவிடப்படுவதாக அறிவித்திருந்தாலும், சாலையினை புதுப்பிக்கும் ஒப்பந்ததாரரே 5 வருடம் பராமரிக்க அனுமதிக்கும் நடைமுறையை கைவிட்டு அரசே சாலை பராமரிப்பு பணியினை மேற்கொள்ள வேண்டும். சாலை பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10 சதவீத ஆபத்து படி மற்றும் சீருடை சலவை படி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசே வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story