சாலை பணியாளர் சங்கத்தினர் முக்காடு போட்டு ஆர்ப்பாட்டம்
சாலை பணியாளர் சங்கத்தினர் முக்காடு போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரியலூர்
தாமரைக்குளம்:
அரியலூரில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு முக்காடு போட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியர்களுக்கான ஊதியம் வழங்க வேண்டும். காலியாக உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களில் கிராமப்புற இளைஞர்களுக்கு சாலை பணியாளராக பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் காமராஜர் தலைமை தாங்கினார். செயலாளர் சிவகுமார் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் பொருளாளர் அரிச்சந்திரன் உள்பட ஏராளமான சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story