சிறுவலூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
சிறுவலூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
கடத்தூர்
கோபி அருகே உள்ள செம்மாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் காந்தி. அவருடைய மகன் பிரசாந்த் (வயது 26). வெல்டிங் வேலை செய்து வருகிறார். குருமந்தூரை சேர்ந்தவர் நந்தினி (19). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் பிரசாந்துக்கும், நந்தினிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.
2 பேரும் கடந்த 1½ ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த 2 பேரின் பெற்றோர்களும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நேற்று பிரசாந்தும், நந்தினியும் வீட்டை விட்டு வெளியேறி கோபி அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு சிறுவலூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து 2 பேரின் பெற்றோரையும் போலீசார் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் பிரசாந்த் வீட்டில் காதல் திருமணத்தை ஏற்றுக்கொண்டதால் அவருடன் நந்தினி அனுப்பி வைக்கப்பட்டார்.