தீயில் எரிந்து கூரை வீடு நாசம்


தீயில் எரிந்து கூரை வீடு நாசம்
x

சுவாமிமலை அருகே தீயில் எரிந்து கூரை வீடு நாசமடைந்தன.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்:

சுவாமிமலை அருகே உள்ள திம்மகுடி கிராமத்தில் அருள்ஜோதி தெருவில் வசிப்பவர் வந்தியத்தேவன் (வயது55). லாரி டிரைவர்.இவரது கூரை வீட்டில் உள்ள மின்மோட்டாரில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கூரை வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் வீடு முழுவதும் எரிந்து நாசமடைந்தது. இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.


Next Story