வீட்டின் மேற்கூரையை பிரித்து திருட முயற்சி


வீட்டின் மேற்கூரையை   பிரித்து திருட முயற்சி
x

தூத்துக்குடி அருகே வீட்டின் மேற்கூரையை பிரித்து திருட முயன்ற வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே உள்ள கீழ செக்காரக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பையா. இவருடைய மனைவி முத்தம்மாள் (வயது 48). கூலித் தொழிலாளி. இவருடைய கணவர், மகன்கள் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர். இதனால் முத்தம்மாள் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று முத்தம்மாள் வீட்டில் படுத்து இருந்த போது, வீட்டின் மேற்கூரையில் இருந்த ஓடு வீட்டுக்குள் விழுந்து உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த முத்தம்மாள் எழுந்து பார்த்த போது, அந்த பகுதியை சேர்ந்த குமாரசாமி (25) என்பவர் மேற்கூவை வழியாக வீட்டுக்குள் நுழைந்து திருட முயன்றாராம். இதனால் முத்தம்மாள் சத்தம் போட்டு உள்ளார். உடனடியாக குமாரசாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாராம்.

இது குறித்த புகாரின் பேரில் தட்டப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story