பேராசிரியர் வீட்டின் மேற்கூரை தீப்பிடித்தது


பேராசிரியர் வீட்டின் மேற்கூரை தீப்பிடித்தது
x

பேராசிரியர் வீட்டின் மேற்கூரை தீப்பிடித்து எரிந்து நாசமானது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் கீழ வீதி தெருவில் ராஜூ என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்து வருபவர் தினகரன்(வயது 32). இவரும், இவரது மனைவி சூர்யாவும் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் நேற்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுவிட்டனர். இந்த நிலையில் மதியம் தினகரனின் ஓட்டு வீட்டின் மேற்கூரை திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டி, மின் கசிவு காரணமாக வெடித்து தீப்பிடித்ததால் வீட்டின் மேற்கூரையும் தீப்பிடித்து எரிந்ததாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இந்த தீ விபத்தால் வீட்டில் இருந்த உபயோக பொருட்களும் தீயில் எரிந்து நாசமாயின.


Next Story