நாகர்கோவிலில் மதுகுடிக்க பணம் கேட்டு தாயை துன்புறுத்திய ரவுடி கைது


நாகர்கோவிலில் மதுகுடிக்க பணம் கேட்டு தாயை துன்புறுத்திய ரவுடி கைது
x
தினத்தந்தி 30 May 2023 12:17 AM IST (Updated: 30 May 2023 12:13 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் மதுகுடிக்க பணம் கேட்டு தாயை துன்புறுத்திய ரவுடி கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் மதுகுடிக்க பணம் கேட்டு தாயை துன்புறுத்திய ரவுடி கைது செய்யப்பட்டார்.

ரவுடி கைது

நாகர்கோவில் செட்டிகுளம் கே.பி.ரோடு பகுதியைச் சேர்ந்தவர் இசைகுமார். இவருடைய மனைவி ஷீலா (வயது 39). இவர் வீட்டு வேலை செய்து வருகிறார். இவருடைய மூத்த மகன் சூரியா என்ற தளபதி சூரியா (25). இவர், ஷீலாவிடம் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் சம்பவத்தன்றும் ஷீலா வேலைக்குச் செல்லும்போது அவரை தடுத்து நிறுத்தி மதுகுடிக்க பணம் கேட்டு, தகாத வார்த்தைகள் பேசி முதுகில் அடித்து காயம் ஏற்படுத்தியுள்ளார். மேலும் கம்பியை எடுத்துக் காட்டி கொலைமிரட்டலும் விடுத்ததாகவும் தெரிகிறது.

இதுகுறித்து ஷீலா கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சாமுவேல் வழக்குப்பதிவு செய்து சூரியாவை கைது செய்தார். ரவுடி பட்டியலில் உள்ள சூரியா மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story