ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டம்


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டம்
x

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டம் நடந்தது.

தஞ்சாவூர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் நேற்று ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஊராட்சி செயலாளர்களுக்கு பணி விதிகளை கால தாமதமின்றி வெளியிட வேண்டும். விடுபட்ட உரிமைகளை உடனடியாக வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட கணினி உதவியாளர்களின் பணி வரன்முறை ஆணைகளை வெளியிட வேண்டும். அனைவருக்கும் உடனடியாக உயர்த்தப்பட்ட விகிதத்தில் ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்.தூய்மை பாரத இயக்க வட்டார, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் ஊதியத்தை உயர்த்துதல், பணிவரன் முறைப்படுத்துதல் போன்றவை மேற்கொள்ள வேண்டும்.இணை இயக்குனர், உதவி இயக்குனர், உதவி செயற் பொறியாளர், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் நிலையிலான அனைத்து பதவி உயர்வு ஆணைகளையும் கால தாமதமின்றி வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தால் மாவட்டத்திலுள்ள ஊரக வளர்ச்சித் துறை அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஊராட்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் 60 சதவீத அலுவலர்கள் பணிகள் வராததால், அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பணிகள் பாதிக்கப்பட்டன.


Related Tags :
Next Story