மண்பானை விற்பனை அமோகம்


மண்பானை விற்பனை அமோகம்
x
தினத்தந்தி 6 Jan 2023 12:45 AM IST (Updated: 6 Jan 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

அய்யலூர் சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானை விற்பனை அமோகமாக நடந்தது.

திண்டுக்கல்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகை கிராமப்புறங்களில் மக்கள் பாரம்பரியமான வழக்கப்படி கொண்டாடி வருகின்றனர். அவர்கள் இதற்காக மண்பாைனகள், அடுப்புகளை புதிதாக வாங்கி பொங்கல் வைக்கும் வழக்கம் உள்ளது. இதையொட்டி நேற்று அய்யலூர் வாரச்சந்தையில் மண்பானைகள், அடுப்புகள் விற்பனைக்கு வந்திருந்தன. கிராம மக்கள் ஆர்வத்துடன் மண்பானைகள், அடுப்பு ஆகியவற்றை வாங்கி சென்றனர். இதனால் மண்பானை மற்றும் அடுப்புகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.





Next Story